கௌதம் கார்த்திக், சூரி, மஜிமா மோகன், ராஜ்கிரண், கோவை சரளா Director: முத்தையா சென்னை: அக்கா -தம்பி பாசத்துடன் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார கொடுமைகளைப் பற்றி பேசுகிறது தேவராட்டம். மதுரை தாதா, அவர் செய்யும் அட்டகாசம், அதனை தட்டிக் கேட்க வரும் ஹீரோ என வழக்கமான ஒன்லைன் தான். ஆனால், அதனை குடும்ப செண்டிமெண்ட் கலந்து, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்து என வித்தியாசமாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் முத்தையா. மதுரையைக் கலக்கும் மிகக் கொடூரமான தாதா பெப்சி விஜயன். எல்லா வில்லன்களையும் போல், வெளியில் தான் வில்லன், வீட்டுக்குள் பாசமான தந்தை. தவமாய் தவமிருந்து ஒரு பிள்ளைக்கு தகப்பனாகிறார். அதனால் உயிருக்கு உயிராக மகனை அவர் வளர்க்கிறார். இதுஒருபுறம் இருக்க, ஆறு பெண் குழந்தைகளுடன் அழகான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் வேல.ராமமூர்த்தி. அவரது மூத்த மகள் வினோதினியும் கர்ப்பமாக இருக்க, மனைவியும் கர்ப்பமாக இருக்கிறார். ஒரே நேரத்தில் இருவருக்கும் குழந்தை பிறக்கிறது. இதற்கிடையே ஒரு பிரச்சினையில் வேல.ராமமூர்த்தியை கொலை செய்து விடுகிறார் பெப்சி விஜயன். இது எல்லாம் வெறும் பிளாஷ் பேக் தான். பிளாஷ் பேக் முடிந்து, கட் பண்ணி ஓபன் செய்தால், 25 வருடங்களுக்கு பின்பு தாவிச் சென்று நிற்கிறது கதை. ஆனால், அப்போதே நம்மால் அப்பா மரணத்திற்கு மகன் பழி வாங்கப் போகிறான் என யூகிக்க முடிகிறது. வினோதினி தன் மகளோடு, தம்பி கௌதம் கார்த்திக்கையும் வழக்கறிஞர்களாக வளர்க்கிறார். சட்டம் முடிக்கும் கௌதம் நிஜமாகவே அநீதிகளை கொஞ்சம் அழுத்தமாக 'அடி'த்துக் கேட்கிறார். ஹீரோயின் மஞ்சிமாவும் கிட்டத்தட்ட அதே கேரக்டர் தான்.
வழக்கமான ஒரு மதுரை படமாகவே வந்துள்ளது தேவராட்டம்.
Director: M. Muthaiah
Music director: Nivas K. Prasanna
Production company: Studio Green
Producer: K. E. Gnanavel Raja
Program head : Smile Jegatheesh
Camera: Selfie Vinoth
Editor: Sarp Anand
Organiser: Selvin Moses
showreelmadurai-whatsapp - 6380898472
0 Comments